
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலியில் பேட்டை துள்ளலுக்கு தயாராகி வருகிறது.இதனால் இங்கு வரும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளது. இன்று பகலில் அம்பலப்புழா பக்தர்கள் மாலை ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளல் நடத்துகின்றனர்.
கேரள மாநிலம் சபரிமலைக்கு தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். குமுளியில் இருந்து நேராக பம்பை சென்று சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் உள்ளனர். அதோடு, பம்பைக்கு இடையில் உள்ள கோட்டயம் மாவட்டம் எருமேலி சென்று அங்கு சிறப்பு பெற்ற “பேட்டை துள்ளல்”லில் பங்கேற்று செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக முதலாமாண்டு சபரிமலை செல்லும் பக்தர்கள் எருமேலி வந்து செல்கின்றனர்.
எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி தினமும் நடந்தாலும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கிற்கு இருநாள் முன்னதாக நடக்கும் அம்பலப்புழா ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும்.இந்த ஆண்டு இன்று நடக்கிறது அன்றோடு பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் நிறைவடைகிறது.
தற்போது பேட்டை துள்ளலுக்காக, எருமேலிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இதற்காக ஐயப்ப பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவிர, எருமேலியில் உள்ள சாஸ்தா கோவிலில் ஐயப்ப பக்தர்களுக்காக குளியல் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் காட்டுவாசிகள் போல வேடமிட்டு சுவாமி திந்தக தோம் ஐயப்பன் திந்தக தோம் என்று கோஷமிட்டு தெய்வீக ஆட்டம் ஆடுவது வழக்கம்.
எருமேலியில் மண்டல சீசன் துவக்கம் முதல் பேட்டை துள்ளல் நடந்தாலும் மகரஜோதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக நடக்கும் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. அம்பலக்குழா, ஆலங்காடு என இரண்டு பக்தர்கள் குழுவினர் நடத்தும் பேட்டை துள்ளலுக்கு பின் இங்கு பேட்டை துள்ளல் இருக்காது. இதையொட்டி இன்று காலை சுமார் 11 மணியளவில் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெற்றயுள்ளது.வானில் கருடன் வட்டமிட அம்பலப்புழா பக்தர்கள் பேட்டை துள்ளலும் வானில்நட்சத்திரம் உதிக்க ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளல் விழா நடைபெறும்.
ஐயப்ப பக்தர்கள் உடலில் வர்ணங்களைப் பூசிக்கொண்டு சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம் என்று ஆடிப்பாடி மகிழ்வர். முதன் முதலாக சபரிமலை செல்லும் கன்னிசாமிகள் எருமேலி வந்து செல்வது வழக்கம்.
சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் ஜன14 இல் நிகழ்வதை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறைதீவிரப்படுத்தி வருகிறது.
மேலும், 13ம் தேதி பம்பை தீபம் மற்றும் பம்பா சத்யா நடைபெறும். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் வரும் 18ம் தேதியுடன் நிறைவடைகிறது. 19ம் தேதியுடன் இவ்வாண்டு மகரவிளக்கு புனித யாத்திரை நிறைவடைந்து மாளிகபுறத்தில் இறுதி நிகழ்வாக குருதி பூஜை நடைபெறும். 20ம் தேதி காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.இத்துடன் மகரவிளக்கு சீசன் நிறைவு பெறும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் மகர ஜோதி தரிசனத்துக்கான ஏற்பாடுகள் பல்வேறு துறைகள் தலைமையில் நிறைவடைந்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.





