சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து-2 பேர் பலி,6 பேர் படுகாயம்..

Published:

IMG 20230119 WA0083 - 2026

சாத்தூர் அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் பலியாயினர்.6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசி சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரின் பேபி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதனை விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார். மேலும் இது நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 70 க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG 20230119 WA0077 - 2026

இந்த நிலையில் இன்று பணியில் ஈடுபட்ட போது மூலப்பொருள் உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இந்த வெடி விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் மேலும் இடிபாடுகளில் சிக்கி சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் மற்றும் ஒரு ஆண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி. சம்பவ இடத்தில் சிவகாசி வெம்பக்கோட்டை சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 தீயணைப்பு படை வீரர்கள் இடிபாடுகளில் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இரண்டு பேர் பலியான சம்பவம் குறித்து விபத்து நடந்த தேவி பட்டாசு தொழிற்சாலையை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

IMG 20230119 WA0084 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img