
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிசோர் தாஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.
ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டத்தில் பிரஜராஜநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது காரில் இறங்கும்போது காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் நபாதாஸ் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, கவலைக்கிடமான நிலையில் ஜர்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.இதனால் ஒடிசா மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.