
மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,”மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன்.நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது, மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவோம்” என்று மோடி கூறியுள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் அவரது நினைவலைகள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி காந்தியடிகள் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
காந்தியும் உலக அமைப்பும் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியில் 90 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளின் வரலாறு முழுமையாக சித்தரிக்கும் விதமாக அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் காந்தியடிகள் தொடர்பான குறிப்புகள் மற்றும் செய்தித்தாள்கள் அவருடைய புகைப்படங்கள் அடங்கிய செல்ஃபி பகுதியும் வைக்கப்பட்ட உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் விதமாக பொதுமக்களுக்கு ஒரு வாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.