இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலில் ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்..

 ஈரோடு இடைத்தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனு தாக்கலில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

mcms 5 - 2026

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய் கிழமை தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் நாள் வேட்புமனு தாக்கலில், சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டினர். பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 10 சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்தனர்.

ஆனால் பத்மராஜன், நூர்முகமது, ரமேஷ், தனலட்சுமி, அருள்ராம் ஆகிய 5 பேரின் மனுக்களை மட்டுமே தேர்தல் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். மற்றவர்களின் வேட்புமனுவில் திருத்தம் இருந்தால், அவற்றை சரி செய்வதற்காக திருப்பி அனுப்பப்பட்டனர். இன்றைய வேட்புமனு தாக்கலில், பத்மராஜன் மற்றும் மனிதன் ஆகியோர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன், 233-வது முறையாக, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை இவர் கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மனிதன் (55) என்பவர் பின்னோக்கி நடந்து வந்து வினோத முறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முன்மொழிய 10 பேர் இல்லாத காரணத்தால் அவரது மனுவை பெற தேர்தல் அலுவலர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற தி.மு.க. சார்பில் 11 அமைச்சர்கள் உள்பட 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 1 வாரமாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories