
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் அறிவிக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் அமர்வில் முறையிட்டது.
இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அதிமுக இடைக்கால பொதுச்செலயாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஜூன் 23 பொதுக்குழுவில் நடந்தது என்ன? ஜூன் 23 அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மேடையில் அமர்ந்தனர். அப்போது தமிழ் மகன் உசேன், அதிமுக அவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுவதற்கு வந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மைக்கை பிடுங்கி, அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கூறினார்.
மத்திய மந்திரிசபை முடிவு அதேபோல கேபி முனுசாமியும் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாகவும் கூறினார். இதே கேபி முனுசாமி முன்னர் ஓபிஎஸ் அணியில் இருந்தவர். அதிமுகவினருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை செம்மலை வாசித்தார். அப்பொதுக்குழு நடைபெற்று கொண்டிருக்கும் போது, 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடனான ஒரு கடிதத்தை புதிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் சிவி சண்முகம் கொடுத்தார்.
இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து வலிமையாக போராட முடியவில்லை; அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்பதையே பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்; அந்த கையெழுத்துதான் தமிழ் மகன் உசேனிடம் கொடுக்கப்பட்டது என்றார் சிவி சண்முகம்.
பின்னர் பேசிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ஜூலை 11ந் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார். அப்போது ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன், இந்த பொதுக்குழு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினர்.
மேடையில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஓபிஎஸ் மீது கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.பின்னர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைதான் தேவை என வலியுறுத்தி வேலுமணி உள்ளிட்டோர் பேசினர். இதுதான் அதிமுகவின் புதிய கலகத்துக்கு அடிப்படையாக அமைந்த 2021-ம் ஆண்டு ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களாக அமைந்தது.அடுத்தடுத்து இரு தரப்பினரும் நீதிமன்றம் சென்று தற்போது உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் அணி தான் உண்மையான அதிமுக ஜூலை 11பொதுக்குழு கூட்டம் செல்லும் இபிஎஸ் தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனவும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம் மனோஜ் கேசிடி நீக்கம் செல்லும் என தீர்ப்பு கூறியுள்ளது.
