
வாணியம்பாடி அருகே இன்று கார் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகியுள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது அதி வேகமாக வந்த கார் மோதி கிரிசமுத்திரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
பலியான மாணவர்கள் ரபீக் (13), சூர்யா (11), விஜய் (13) என தெரியவந்துள்ளது.