pm modi at indian science congress - 2026

கல்லணையின் பெருமையைப் பேசிய பிரதமர் மோடி!

சற்றுமுன் Featured இந்தியா லைஃப் ஸ்டைல்
pm modi at indian science congress - 2026

உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு எப்போதும் முக்கிய தூணாக இருந்து வருவதாகவும், 2014ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் சராசரி தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு, இரண்டு மடங்காகி இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் உள்ள கல்லணையின் பெருமையையும் அவர் எடுத்துக் கூறினார். அவருடைய பேச்சில் இருந்து…

நண்பர்களே, எந்த ஒரு தேசத்தின் வளர்ச்சியிலும், நிலையான வளர்ச்சியிலே, ஒளிமயமான எதிர்காலத்தை, கவனத்தில் எடுத்துக் கொண்ட வளர்ச்சியிலே, உள்கட்டமைப்பின் மகத்துவம், எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.   யாரெல்லாம், உள்கட்டமைப்போடு தொடர்புடைய வரலாற்றை ஆய்வு செய்கிறார்களோ, அவர்களுக்கு இதுபற்றி நன்றாகவே தெரியும். 

எடுத்துக்காட்டாக நம் நாட்டிலே, கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் முன்பாக, சந்திரகுப்த மௌரிய அரசர், உத்தராபத்தினை நிர்மாணம் செய்தார்.   இந்தப் பாதையானது, மத்திய ஆசியா மற்றும் பாரத துணைக்கண்டத்துக்கு இடையே, வியாபாரச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிம் உதவியாக இருந்தது.  பிற்காலத்திலே, சாம்ராட் அசோகரும் கூட, இந்தப் பாதையில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். 

16ஆம் நூற்றாண்டிலே, ஷேர்ஷா சூரியும் கூட, இந்தப் பாதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதில் புதிய வகையில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றினார்.  அதே போல பிரிட்டிஷார் வந்த போது, அவர்கள் இந்தப் பாதையை, மேலும் மேம்படுத்தினார்கள், பிறகு இது, ஜிடி ரோட் என்றழைக்கப்பட்டது.  அதாவது, தேசத்தின் வளர்ச்சிக்கு தேசத்தின் நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி என்ற சிந்தனை, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது. 

இதைப் போலவே, நாம் பார்க்கிறோம், இப்போதெல்லாம், ஆறுகளின் கரைகளிலே, வழிகள் நீர்வழிப் பாதைகள் பற்றி, நிறைய விவாதிக்கப்படுகிறது.  இந்தப் பின்புலத்திலே, நாம் பனாரசின் கரைகளை நாம் கவனித்தோம் என்றால், அதுவுமே கூட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட ஆற்றுத்துறைகள் தானே!!   கோல்காத்தாவோடிருக்கும் நேரடி நீர்வழி இணைப்புக் காரணமாக, எத்தனையோ நூற்றாண்டுகளாக, பனாரஸ் வியாபாரச் செயல்பாடுகளுக்கான மையமாகவும் இருந்து வந்திருக்கிறது. 

kallanai - 2026

மேலும் ஒரு சுவாரசியமான உதாரணம்.   தமிழாட்டினுடைய, தஞ்சாவூரிலே, கல்லணை டேம் இருக்கிறது.  இந்தக் கல்லணை அமைப்பானது, சோழ சாம்ராஜ்ய காலத்திலே உருவாக்கப்பட்டது.  இந்த அணையானது கிட்டத்தட்ட, 2000 ஆண்டுகள் பழைமையானது.  மேலும் உலக மக்களுக்கு ஆச்சரியத்தை அதிகரிக்கக்கூடிய தகவல் என்னவென்றால், இந்த அணை, இன்றுங்கூட செயல்பட்டு வருகிறது.  2000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட இந்த அணை, இன்றுங்கூட, இந்தப் பகுதியில் வளத்தை அளித்துக் கொண்டு வருகிறது.  பாரதத்தின் பாரம்பரியம், எத்தனை உயரியது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.  எத்தனை நிபுணத்துவம் இருந்திருக்க வேண்டும்!!  எத்தனை திறமை இருந்திருக்க வேண்டும்!!  துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பிறகு, நவீன உள்கட்டமைப்பின் மீது, எந்த அளவுக்கு முக்கீயத்துவம் அளிக்கப்பட்டிருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு அளிக்கப்படவில்லை… என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.