சென்னை விமான நிலையத்தில் விமான டயர் வெடித்தது: பயணிகள் உயிர் தப்பினர்

Published:

air-india-chennaiசென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று திடீரென விமானத்தில் டயர் வெடித்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 150 பயணிகள் உயிர் தப்பினர். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதை அடுத்து, விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். விமானத்தில் இருந்து இறங்கிய பிறகே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். டயர் வெடித்ததை அடுத்து, விமானி சமார்த்தியமாகச் செயலபட்டார், அதனால் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினர் என்றும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.

Related articles

Recent articles

spot_img