விறுவிறுப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

சற்றுமுன்

afgan-teamஉலகக் கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டத்தில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய ஏ பிரிவு 17 வது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து அணியும் ஆப்கனிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில், முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 210 ரன் எடுத்து, ஆப்கனுக்கு 211 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முன்னதாக ஆப்கன் அணி டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணியில், துவக்க வீரர் மெக்லெட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கார்டினரும் 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் கோட்சர் 25 ரன்னும் மகென் 31, மொம்சென் 23, பெரிங்டன் 25, ஹக் 31, எவன்ஸ் 28 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன் எடுத்தது. இதை அடுத்து களம் இறங்கிய ஆப்கன் அணி, அதிரடியாக ஆட்டத்தைத் துவக்கியது. அந்த அணி துவக்கத்தில் விரைவாக ரன் சேர்த்து அதிரடியாக விளையாடிய போதும், பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்தது. துவக்க வீரர் ஜாவேத் அஹ்மதி 51 ரன் சேர்த்தார். நடு வரிசையில் சமியுல்லா ஷென்வாரி 96 ரன் சேர்த்தார். இருவரின் அதிரடியில் அணி வெற்றிக்கான ரன்னை சேர்த்தது. கடைசியில் மனம் தளராமல் ஹமித் ஹசன் 15 ரன்னும், ஷபூர் 12 ரன்னும் சேர்த்து வெற்றிக்கு உறுதி செய்தனர். 49.3 ஓவர் இறுதியில் ஆப்கன் அணி 9 விக்கெட் இழந்து, 211 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.