நாளை முதல் மதுரை வழியாக… வழக்கம் போல் ரயில்கள் இயக்கம்!

madurai junction - 2026

மார்ச் 8- நாளை முதல் ரயில்கள் வழக்கம்போல் மதுரை வழியாக இயக்கப் படுகின்றன.

மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக சில ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

புதிய மின்மயமாக்கல் ஏற்பாடுகள், புதிய ரயில் பாதை இணைப்புகள், புதிய சைகை மின்னணு கைகாட்டி விளக்குகள், காலி ரயில் பெட்டி தொடர்களை ரயில் நிலையத்திலிருந்து எடுத்து செல்ல தனி பாதை அமைப்புகள், ‌ ரயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரயில் பாதை, புதிய நடைமேடை, நடை மேடை நீட்டிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்தப் பணிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்று விட்டன. எனவே மார்ச் 8 முதல் மதுரை வழியாக அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும். மதுரை ரயில் நிலையத்தில் சராசரியாக 65 பயணிகள் ரயில்கள், 10 சரக்கு ரயில்கள் கையாளப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ரயில் பாதை இணைப்பு பணிகளால், மதுரை ரயில் நிலையத்தில் கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் மூலம் ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படும். இதற்காக 75 சென்டிமீட்டர் அகல கணிப்பொறி திரைகள் நிறுவப்பட்டுள்ளன.

இதில் ரயில் பாதை அமைப்புகள், கலர் விளக்கு சிக்னல்கள், ரயில் பாதை பாய்ண்ட் இணைப்புகள் ஆகியவை உள்ளன. கணிப்பொறி “மௌஸ்” மூலம் நிலைய அதிகாரி ரயில்களை இயக்க பாயிண்டுகளை நேர் செய்வது, சிக்னல் விளக்குகளை ஒளிரச் செய்வது போன்ற பணிகளை எளிதாக செய்யலாம். எந்தெந்த ரயில் பாதைகளில் ரயில்கள் இருக்கின்றன என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

தெற்கு ரயில்வேயில் மதுரை ரயில் நிலையத்தில் அதிக அளவில் 385 ரயில் பாதைகள், 88 ரயில் பாதை இணைப்புகள், 100 சிக்னல் வயரிங் அமைப்புகள் ஆகியவை உள்ளன. இந்த மின்னணு தொழில்நுட்பம் மதுரை ரயில் நிலையத்தில் 2012 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு 2019 ஆம் ஆண்டு தேனி அகல ரயில் பாதை துவக்கத்தின் போது மேலும் மெருகூட்டப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இணைப்பு பணிகளில் மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நிலைய அதிகாரிகள் நம்பிக்கையான, விரைவான முடிவுகள் எடுத்து ரயில்களை தாமதம் இல்லாமல் பாதுகாப்புடன் இயக்க முடியும். திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ரயில் நிலையத்திலும் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மதுரை கோட்டத்தில் திருச்சி – திருநெல்வேலி பிரிவு மற்றும் செங்கோட்டை – புனலூர் பிரிவுகளில் உள்ள ரயில் நிலையங்களில் புதிய மின்னணு சைகை தொழில்நுட்பம் வாயிலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories