முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

images 34 - 2026

தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) வருகிற மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வருகிற பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

அமைச்சரவை கூட்டத்தில், மார்ச் மாதம் 20ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும்.

முக்கியமாக, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட மகளிர் உரிமைத்தொகையாக பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்தும் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர் தமிழக அரசிடம் கேட்டார். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பினார்.

இதற்கு ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த பிரச்னை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்போது, அதை அவர் திருப்பி அனுப்பினால் மீண்டும் 2வது முறையாக அதே சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கும்போது அவர் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.

அதனால், வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கான தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories