962613 - 2026

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல்..

சற்றுமுன்
962613 - 2026

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை நிகழ்ச்சிக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாத1000 வழங்குவது, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித்துறை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவருதல் ஆகியவை குறித்தும், முதல்வரின் காலை உணவுத்திட்டம் விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றுவார். அதன் பின்னர், சட்டபேரவை நிகழ்ச்சிகள் முடிவடையும் இந்நிலையில் சற்று நேரத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார்.

சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் இருக்கை மாற்றப்படாத நிலையில், இதை காரணமாக வைத்து பட்ஜெட் உரையை அதிமுகவினர் புறக்கணித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.