
மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்2’ படம் இந்த மாதம் 28ல் வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து படக்குழு தற்போது தீவிர புரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இதன் முதல் பாடலான ‘அகநக’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் தீவிரமாக லண்டனில் நடைபெற்றது.
இயக்குநர் மணிரத்னத்துடன் இருக்கும்படியான இந்தப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்திருந்தார்.
லண்டனில் இருக்கக்கூடிய அபெய் ரோடு ஸ்டுடியோஸில் இதன் பணிகள் நடந்துள்ளது. முதல் பாகத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் இசைக்கும் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதனை மனதில் கொண்டே, இசை சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக லண்டனில் இந்த இசைப் பணிகளை படக்குழு மேற்கொள்ளப்பட்டுள்ளது.என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்