ஐ.பி.எல் 2023 – எட்டாம் நாள் – 07.04.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2023 தொடரின் எட்டாம் நாளான நேற்று சன் ரைசர்ஸ் ஹதராபாத, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் நடந்த ஆட்டத்தில் லக்னோ அணி வென்றது. ஹைதராபாத் அணியை (121/8, அன்மோல்ப்ரீத் சிங் 31, ராகுல் திரிபாதி 34, அப்துல் சமது 21, க்ருணால் பாண்ட்யா 3/18, அமித் மிஸ்ரா 2/23) லக்னோ அணி (16 ஓவரில் 127/5, கே.எல். ராகுல் 35, க்ருணால் பாண்ட்யா 34, அதில் ரஷீத் 2/23) 5 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ஹதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஆனால் 20 ஓவருக்கு எட்டு விக்கட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. லக்னோ அணியில் மார்க் வுட், ஆவேஷ் கான் இருவரும் இன்று ஆடவில்லை. ஆனால் க்ருணால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா ஆகிய மூவரும் தலா 4 ஓவர்கள் வீதம் 12 ஓவர்கள் வீசி 57 ரன் கொடுத்து 6 விக்கட் எடுத்தனர். க்ருணால் மாயங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத்சிங், மர்க்ரம் ஆகியோர் விக்கட்டுகளை எடுத்து ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
ராகுல் திரிபாதியும் வாஷிங்டன் சுந்தரும் ஏறத்தாழ ஏழு ஓவர்கள் விளையாடி ஹைதராபாத் அணியின் ஸ்கோரை சற்று நிலைநிறுத்தினர். இவர்கள் இவ்வாறு விளையாடியதில் நன்மையும் இருந்தது; தீமையும் இருந்தது. நன்மை என்னவென்றால் அணி குறைந்தது 121 ரன் அடித்தது. தீமை என்னவென்றால் இம்பேக்ட் ப்ளேயராக அதிரடி பேட்டராக கிளாசன் இரங்க இருந்தார். ஆனால் அவரைப் ப