தொழிலதிபரை கடத்தி சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மிரட்டிய வழக்கில்
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் ரகசிய வாக்குமூலம்

தொழிலதிபரை ரூ.2 கோடி கேட்டு அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் கடத்தி மிரட்டிய வழக்கில் திருவில்லிபுத்தூர் நடுவர் எண் இரண்டு நீதிமன்றத்தில் நேற்று 5 பேர் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்
சிவகாசி அருகே சக்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், மற்றும் தங்கமுனியசாமி,.
ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து பயர் ஓர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை வாங்கி நடத்தி வந்தார். அதன்பின் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும் தங்களது பங்கு தொகையை பெற்றுக் கொண்டு தொழிலில் இருந்து விலகி விட்டனர்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு ரூ.2 கோடி கேட்டு ரவிச்சந்திரனை ராஜவர்மன்(52), தங்கமுனியசாமி(30), நரிக்குடி ஊராட்சிஒன்றிய துணை தலைவர் .ரவிசந்திரன்(53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி(50), ஓய்வு பெற்ற டிஎஸ்பி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஆகிய 6 பேர் மீது திருவில்லிபுத்தூர் நீதிமன்ற உத்தரவுபடி திரு வில்லிபுத்தூர் நகர் போலீஸார் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் திரு வில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, ஐ.ரவிச்சந்திரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு திருவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது இந்நிலையில் நேற்று
இந்த வழக்கு தொடர்பாக புகார் தாரர் ரவிச்சந்திரன் உறவினர்கள் இரண்டு பேர் உட்பட ஐந்து பேர் நேற்று திருவில்லிபுத்தூர் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நீதிபதி வள்ளி மணாளன் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்