நாளை ரமலான் தமிழகத்தில் ஆடு விற்பனை பல கோடி அமோகம்..

Published:

images 64 - 2026
#image_title

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்றது.

தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது. தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.

கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும், பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது. இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஆறு ஆயிரம் முதல் எட்டாயிரம் வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக ரூபாய் 5 கோடி விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களை கட்டியது. 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்த நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட ரூ.500 முதல் ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்தது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

விலை அதிகரித்த போதிலும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

இந்த சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது. ஆடு ஒன்று ரூ.3000 முதல் ரூ.25000 வரை விற்கப்பட்டது. ரம்ஜானையொட்டி இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img