
இன்று சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம். நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இன்று இரவில் கருட சேவை புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி இரவில் கருட சேவை புறப்பாடு, 28ம் தேதி மாலை தங்க புண்ணியகோடி விமானத்தில் புறப்பாடு, 29ம் தேதி இரவில் குதிரை வாகன சேவை, 30ம் தேதி தேரோட்டம், 31ம் தேதி தீர்த்தவாரி ஆகியவை முக்கிய திருவிழாக்கள் நடைபெறும்.
பாரத தேசத்தின் பழமையான வைணவ திரு மடங்களில் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடம் மிகவும் பழமையானது. சுவாமி மணவாள மாமுனிகளின் பிரதான சீடர் சுவாமி பொன்னடிக்கால் ஜீயர் சுவாமி இதன் முதல் பட்டத்தை அலங்கரித்தார்.
தற்போது 31வது பட்டம் ஶ்ரீ மதுரகவி வானமாமலை ஜீயர் சுவாமி வரையான சுவாமிகளின் நியமனத்தில் திருக்கோவில் நிர்வாகம் சீருடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




