கொச்சியில்‌ வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்து..நாளை துவக்கி வைக்கும் பிரதமர்..

images 89 - 2026
#image_title

இந்தியாவிலேயே முதல் முறையாக ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கேரளாவில் செயல்படுத்தப்பட உள்ளது. சுற்றுலா படகு போக்குவரத்து சேவைக்காக 9 படகுகள் சோதனை ஓட்டம் முடிந்து தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முக்கிய இடம் என்பதால், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கொச்சியில் துறைமுகம், விமான நிலையம் உள்ளது. இந்தநிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கேரளாவில் செயல்படுத்தப்பட உள்ளது.

கொச்சி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று கண்டு ரசிக்கலாம்.

புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டும் இருந்த மெட்ரோ திட்டம், கடல் வழியிலும் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை நாளை செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து ‘வாட்டர் மெட்ரோ’ திட்ட படகு சோதனை ஓட்டம் நடந்தது.

கொச்சி படகு குழாமில் இருந்து புறப்பட்டு கோர்ட்டு, வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளது. சுற்றுலா படகு போக்குவரத்து சேவைக்காக 9 படகுகள் சோதனை ஓட்டம் முடிந்து தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ரூ.747 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒரு படகில் 100 பேர் பயணம் மேற்கொள்ளலாம். குறைந்த கட்டணம் ரூ.20, அதிக கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. வந்தே பாரத் ரெயிலில் உள்ளவாறு, கழிப்பிடம், உணவு, குளிர்சாதன வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் வாட்டர் மெட்ரோ திட்ட படகுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories