02-06-2023 2:03 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Become a member

    Get the best offers and updates relating to Liberty Case News.

    ― Advertisement ―

    spot_img

    புதுச்சேரியில் திருமண தாம்பூல பையுடன் மது பாட்டில் 

    புதுச்சேரியில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் குவார்ட்டர் பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு திருமணம் முடிந்தவுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது...
    Homeசற்றுமுன்காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்..

    காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்..

    images 73 2

    காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. 

    ராமநாதபுரம் மாவட்டம் பனையபுரத்தில் காலிமதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் போன்றவை கண்மாய், விவசாய நிலங்களில் வீசப்படுவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பனையபுரத்தில் 2 மதுக்கடைகளை அகற்றக் கோரியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் தொடங்கி 6 மாதம் ஆகியும் சோதனை முறை எனக் கூறுவது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மலைப்பகுதிகளில் மட்டுமே அமல்படுத்தினால் போதுமா? என்று வினவிய நீதிமன்றம், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டங்களை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.

    இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

    ராமநாதபுரம் பனையபுரத்தில் 2 மதுக்கடைகளை அகற்றக் கோரிய வழக்கை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .