இன்று திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார்.
கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி வந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று இரண்டாவது நாளாக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபக்கமும் நின்ற பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் அவர்களை பார்த்து கைகளை காட்டினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்துள்ளார். திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்துள்ளார். திண்டுக்கல்-பாலக்காடு மின்பாதை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சென்னை-பாலக்காடு அதிவிரைவு ரெயில், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில், பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் பல்வேறு சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையில் டீசல் என்ஜின் ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் திண்டுக்கல்-பாலக்காடு இடையேயான 179 கி.மீ. தூர ரெயில் பாதையை, மின்பாதையாக மாற்றும் பணி நடைபெற்றது. மேலும் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு என 3 கட்டங்களாக மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன. அதில் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி இடையே மின்மயமாக்கல் பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுவிட்டன.
அதையடுத்து பொள்ளாச்சி-பாலக்காடு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மயமாக்கல் பணி முடிந்தது. அதோடு திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் திண்டுக்கல்-பாலக்காடு ரெயில் மின்பாதையை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையொட்டி திண்டுக்கல், பழனி, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நிகழ்ச்சிகள் நடந்தது.