வறட்சியின் பிடியில் பாபநாசம் அணை..

500x300 1870101 1dam1 - 2026
#image_title

நெல்லை மாவட்ட பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் வறட்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 814 மில்லிமீட்டர் ஆகும். இந்த மாதம் வரை 181 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் சுமார் 72 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதிலும் சுமார் 10 அடி வரையிலும் சகதி தான் இருக்கும் என்பதால் வறட்சியின் பிடியில் அணை சிக்கியுள்ளது. தற்போது அணையானது குட்டை போல் காட்சியளிக்கிறது.

தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 73.40 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் மொத்தம் 5,511 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும். ஆனால் இன்று நிலவரப்படி அந்த அணையில் 1756 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories