திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் மே 4,5-ல்‌ கிரிவலம்..

images 31 - 2026
#image_title

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 4 மற்றும் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி மே 4-ந் தேதி வியாழக்கிழமை இரவு 11.59 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

இதனால் 5-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் என்றும், அன்றைய நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

திருவண்ணாமலைக்கு நாளை முதல் 4500 சிறப்பு பஸ்கள் இயக்கம்..

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் வழக்கமான பஸ்களுடன் திருவண்ணாமலைக்கு 4500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலைக்கு 4500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளை நள்ளிரவு முதல் நாளை மறுநாள் வரை பவுர்ணமி தொடர்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்று முதல் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆயிரம் கூடுதல் பஸ்களை இயக்கவும், சென்னை, கும்பகோணம், சேலம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்களின் வாயிலாக 1500 கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் வழக்கமான பஸ்களுடன் திருவண்ணாமலைக்கு 4500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ்கள் சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரத்தில் இருந்தும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தருமபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு கோயம்பேடு, தாம்பரம் பஸ் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோவிலில் நடக்கும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து, வரும் 4, 5-ந் தேதிகளில், மெமு வகை குறுகிய தூர பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து வரும் 4, 5-ந் தேதிகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் அதே நாளில் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும். திருவண்ணாமலையில் இருந்து வரும் 5, 6-ந் தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் அதே நாளில் அதிகாலை 5.35 வேலூர் செல்லும்.

இந்த ரெயில்கள் வாணியம்பாடி, ஆரணி ரோடு, போளூர் வழியாக இயக்கப்படும். விழுப்புரத்தில் இருந்து வரும் 5-ந் தேதி காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் காலை 11 மணிக்கு திருவண்ணா மலைக்கு செல்லும். திருவண்ணாமலையில் இருந்து வரும் 5-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். விழுப்புரத்தில் இருந்து வரும் 4, 5-ந் தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும். திருவண்ணாமலையில் இருந்து வரும் 5, 6-ந் தேதிகளில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாளில் காலை 5 மணிக்கு விழுப்புரம் செல்லும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories