02-06-2023 6:55 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Become a member

    Get the best offers and updates relating to Liberty Case News.

    ― Advertisement ―

    spot_img

    புதுச்சேரியில் திருமண தாம்பூல பையுடன் மது பாட்டில் 

    புதுச்சேரியில் நடைபெற்ற கல்யாணம் ஒன்றில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் குவார்ட்டர் பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு திருமணம் முடிந்தவுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது...
    Homeசற்றுமுன்நீட் தேர்வு -ஹால் டிக்கெட் வெளியீடு..

    நீட் தேர்வு -ஹால் டிக்கெட் வெளியீடு..

    images 36

    நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2023-24ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தியாவில் 499 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 7-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி, http://Neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 011-40759000 என்ற எண்ணிலோ அல்லது n[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது