ஷேர் ஆட்டோ- அரசு பேருந்து மோதி விபத்து: 6 பேர் பலி..

Published:

images 38 - 2026
#image_title

மாமல்லபுரம் அருகே ஷேர் ஆட்டோ- அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ, பேருந்து மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img