
ராஜபாளையத்தில் நடந்து வரும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் 35மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் அணிகளை சேர்ந்த 1000 க்கும மேற்பட்டோர் பங்கேற்றுஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராம்கோ ஊர் காவல் படை மைதானத்தில் மாநில கைப்பந்து கழகத்தின் சார்பில் நான்கு நாட்கள் மாநில அளவில் கைப்பத்து போட்டிகள் 1000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 50 நடுவர்கள் கொண்ட போட்டி நான்கு நாட்கள் நடைபெறுகிறது
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் ராம்கோ ஊர் காவல் படை மைதானத்தில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் மாநில யூத் சாம்பியன்ஷிப் மற்றும் விருதுநகர் மாவட்ட கைபந்து கழகம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்ட யூத் கைப்பந்து போட்டிகள் மாநில அளவில் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் சென்னை கோவை மதுரை விருதுநகர் திருச்சி புதுக்கோட்டை ஈரோடு சேலம் விழுப்புரம் தர்மபுரி கிருஷ்ணகிரி ராமநாதபுரம் திருநெல்வேலி உள்ளிட்ட 35 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் வீரர்களும் 29 மாவட்டத்தை சேர்ந்த பெண் வீரர்களும் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் 1000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு கைப்பந்து போட்டியில் விளையாடிகின்றனர் .
இந்த போட்டியில் 50 நடுவர்கள் தேர்வு குழு உறுப்பினர் கலந்து கொண்டு போட்டி பகல் இரவு வாக நடைபெறுகிறது இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற் கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது




