காமன்வெல்த் போட்டி-தங்கம் வென்ற சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி ..

Published:

500x300 1743219 satwik1 - 2026

காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது. இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img