
இராஜபாளையம் நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு ராம்கோ குழுமம் செயல்பட்டு வருகிறது என இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் 84 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ராம்கோ குழும சேர்மன் பி ஆர் வெங்கட்ராம ராஜா சிறப்புரையாற்றினார்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் 84 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பி.எஸ் குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு ராம்கோ குழுமம் சேர்மனும் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க தலைவருமான பி ஆர் வெங்கட்ராம ராஜா தலைமையில் நடைபெற்றது .
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராம்கோ குழும சேர்மன் பி ஆர் வெங்கட்ராம ராஜா இராஜபாளையம் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பாதாள சாக்கடை திட்டம். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம். ரயில்வே மேம்பால திட்டம் ஆகியவற்றை
விரைந்து முடிக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வலியுறுத்தி வருகிறோம் .அதேபோல் ரயில்வே மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை தொழில் புத்தக சங்கம் சார்பில் வலியுறுத்துவதாகவும் பேசினார்.
மேலும் இராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் இராஜபாளையம் நகர் பகுதியில் வீட்டு வரி குடிநீர் வரி அதிகரித்துள்ளது இதை குறைக்க நடவடிக்கை வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வலியுறுத்துவதாகவும் உரையாற்றினார் .
தொடர்ந்து பேசும் பொழுது இராஜபாளையம் நகரை சுமார் சிட்டியாக மாற்றுவதற்கு ராம்கோ குரூப் நடவடிக்கை எடுத்து வருகிறது அதற்கு தொழில் வர்த்தக சங்கத்தில் உள்ள கிளை சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய விருதுநகர் வியாபாரத் தொழிற்சங்க செயலாளர் இதயம்
வீ ஆர் முத்து பேசும்பொழுது விருதுநகர் மாவட்டத்திற்கு தொழில் நாகரத்தில் முதன்மை நகராக செயல்படுவது இராஜபாளையம் இந்த நகரில் என்னை அழைத்துப் பேச வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என சிறப்புரையாற்றினார் .
இந்த கூட்டத்தில் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் இருக்கக்கூடிய இராஜபாளையம் நகர் பகுதிகளை பல்வேறு சங்க நிர்வாகிகள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுடனர்
பொதுக்குழு கூட்டத்தில் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர்
தலைவராக ராம்கோ குழுமத்தின் சேர்மன் பி.ஆரவெங்கட்ராம ராஜா ,துணைத் தலைவர்களாக என்.கே .ஸ்ரீ கண்டன் ராஜா .ஆர். பத்மநாபன் செயலாளர்களாக
எம்.சி.வெங்கடேஸ்வர ராஜா.
ஆர்.நாராயணசாமி ,இணைச்செயலாளராக கே. மணிவண்ணன்,பொருளாளர்
பி.எம்.ராமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்




