- Advertisements -
Home உரத்த சிந்தனை விடியல் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆளுநரின் அதிரடி பேட்டி

விடியல் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆளுநரின் அதிரடி பேட்டி

கவர்னர் ரவி டைம்ஸ் ஆஃப் இண்டியாவுக்கு கொடுத்திருக்கும் பேட்டி (இன்றைய நாளிதழ்) நீண்ட காலத்துக்கு சர்வாதிகாரியை அசிங்கப்படுத்த போதுமானதாக இருக்கும்!

- Advertisements -
  • செல்வநாயகம்

கவர்னர் ரவி டைம்ஸ் ஆஃப் இண்டியாவுக்கு கொடுத்திருக்கும் பேட்டி (இன்றைய நாளிதழ்) நீண்ட காலத்துக்கு சர்வாதிகாரியை அசிங்கப்படுத்த போதுமானதாக இருக்கும்!

பேட்டியிலிருந்து சில:

கேள்வி (Jaya Menon, டைம்ஸ் ஆஃப் இண்டியா): தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது நீங்கள் வெளிநடப்பு செய்தது முறையா?

- Advertisements -

கவர்னர்: 2022இல் நான் சட்டமன்றம் வரும் வரை தமிழக சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை. சட்டமன்றம் துவங்கும் போதும் முடியும் போதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று வாய்வழியே சொன்னதோடு, சபாநாயகருக்கும் அரசுக்கும் எழுதினேன். என்றாலும் தேசிய கீதம் பாடப்படவில்லை. ஆளுநர் உரையில் பொதுவாக அரசு கொள்கைகளும் நிகழ்ச்சிகளும் இருக்கும். ஆனால் அவர்கள் கொடுத்த உரையில் கொள்கையில்லை, மாறாக பரப்புரையே இருந்தது (propaganda). அவை தவறானவையாகவும் (inaccurate) பொய்களாகவும் இருந்தன. தமிழகம் அமைதிப் பூங்கா என்கிறார்கள் உரையில். ஆனால் உண்மையில், பயங்கரவாத அமைப்பு பி.எஃப்.ஐ தடைக்குப் பின் 5 நாட்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன, 50க்கும் மேற்பட்ட bomb attacks நடந்தேறின. ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை (அரசால்).

அதையடுத்து கோவை குண்டு வெடிப்பு (முபின்). அதையடுத்து கள்ளக்குறிச்சி பள்ளி தாக்குதல். பள்ளி தீக்கிரையானது. போலீஸ் வேடிக்கை பார்த்தது. அது தவிர, ஒரு கூட்டத்தில் திமுக பிரமுகரால் பெண் போலீஸ் அத்துமீறல் செய்யப்படுகிறார். அந்த பெண் போலீஸை வற்புறுத்தி வழக்கை வாபஸ் பெற வைக்கிறார்கள்.

இது மட்டுமல்ல. மாஃபியாக்கள் பற்றி கேள்விப் படுகிறோம். மணல் கடத்தல் மாஃபியா வி.ஏ.ஓவை அலுவலகம் புகுந்து தாக்கி முடிக்கிறார்கள். பாகிஸ்தான் தொடர்புடைய போதை வஸ்து கடத்தல் காரர்கள் தமிழகத்துடன் தொடர்பு.

இவையெல்லாம் நடக்கும் போது என்னை ‘தமிழகம் அமைதிப் பூங்கா’ என்று சொல்ல சொல்கிறீர்களா? சத்தியப்பிரமாணப் படி தமிழக மக்களுக்கு உண்மையை சொல்ல கடமைப் பட்டவன் நான். 🔥 🔥

அது மட்டுமல்லாமல், கோவில் நிர்வாகம் (அறம்கெட்ட துறை) பற்றி புகழச் சொல்கிறார்கள். 3000 ஏக்கர் நிலம் மீட்டதாக சொல்கிறார்கள். 50,000 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் இருக்கும் போது, வெறும் மூவாயிரம் ஏக்கரை மீட்டோம் என்பது மிகச் சிறிய அளவு.

2022இல் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்ன நடந்தது (ஸ்னேக் பாபு) என்பதையும் அனைவரும் அறிவர். பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு அதிகாரிகள் தீக்ஷிதர்களுக்கு எதிராக, ‘சிதம்பரம் கோவிலில் பால்ய விவாகம் நடப்பதாக’ 8 புகார்கள் அளித்தனர். பெற்றோர் கைது செய்யப்பட்டனர். ஆறு – ஏழாம் வகுப்பில் பயிலும் சிறுமியர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு virginity tests, two-finger testக்கு உட்படுத்தப் பட்டனர் (virginity tests, two-finger test என்றால் என்ன என்பதை கூகுள் செய்யவும். கொடுமை. இதை எந்த ஊடகமும் வெளியிட்டதாக தெரியவில்லை. அதிமுக ஏன் வாய்திறக்கவில்லை இது பற்றி?). இது பற்றி முதலமைச்சருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன்.

இதெல்லாம் நடக்கும் போது அரசை புகழ்ந்து பேசச் சொல்கிறீர்கள் என்னை? இது அதிகமில்லையா?

அதையடுத்து என்னை ‘திராவிட மாடல் ஆட்சி (governance)’ பற்றி புகழ்ந்து பேச சொன்னார்கள். முதலில் அப்படி ஒரு ஆட்சி முறை கிடையாது. அது ஒரு அரசியல் முழக்கம். காலாவதியான சித்தாந்தத்தை நிலை நிறுத்த முயற்சி. ‘ஒரு பாரதம்’ என்பதற்கு எதிரான சித்தாந்தம். தேசிய விடுதலை போராட்ட இயக்கத்தை மட்டம் தட்டுவது. வரலாற்றை அழிக்க முயற்சிப்பதோடு, பிரிட்டிஷோடு சகாயம் செய்தவர்களை உயர்த்திப் பிடிப்பது (யோ ராம்சாம் நாயக்… ஒன்னைத் தான் சொல்றார்). 🤣

அந்த சித்தாந்தம் மொழி வெறியை நாடு முழுதும் திணிப்பது. வேறெந்த மொழியும் தமிழகத்துக்குள் நுழைய முடியாது. பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கும் கலைஞர் நூலகத்தில் 3.25 லட்சம் புத்தகங்கள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும், பிற மொழி புத்தகங்களுக்கு இடமில்லை. பிரிவினையை திணிக்கும் சித்தாந்தம் அது. அந்த சித்தாந்தத்துக்கு நான் ஒப்புதல் (endorse) தர மாட்டேன்.

சட்டமன்றத்தில் நான் (ஆங்கிலத்தில்) பேசி முடித்ததும், சபாநாயகர் என் உரையை தமிழில் வாசித்தார். நான் காத்திருந்தேன்.

ஆனால் விதிமுறைக்கு எதிராக, நெறி முறைக்கு எதிராக, சபாநாயகருடைய ஒத்துழைப்புடன் முதலமைச்சர் எழுந்து ஆளுநருக்கு நெருக்கடி தர, ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு நான் அனுமதிக்கவில்லை. அதனால் நான் வெளிநடப்பு செய்தேன். எனக்கு டாக்டர் அம்பேத்கர் பற்றி அவர்கள் சொல்லித் தரத் தேவையில்லை. ஆளுநர் மாளிகையில் டாக்டர் அம்பேத்கர் சிலையை நான் நிறுவுமுன் இது ஜனவரியில் நடந்தது. அவர் என் இதயத்தில் வாழ்கிறார்.

கேள்வி: முதல்வருடன் உங்கள் உறவு பற்றி…

பதில்: நல்ல உறவு இருக்கிறது.

கேள்வி: நிர்வாகத்தில் நீங்கள் தலையிடுவதாக புகார் சொல்கிறார்களே…

பதில்: இல்லை. நிர்வாகம் அரசின் கையில் இருக்கும் போது ஆளுநர் எப்படி தலையிட முடியும்?

கேள்வி: மசோதாக்களுக்கு ஆளுநர்கள் அனுமதி அளிக்க வேண்டும் அலல்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது பற்றி..

பதில்: அப்படி இல்லை. இரண்டாவது முறை வரும் மசோதாக்களை நிராகரிக்க முடியாது.

கேள்வி: எத்தனை மசோதாக்கள் இப்போது நிலுவையில் உள்ளன?

பதில்: ஒரு மசோதாவும் என்னிடம் நிலுவையில் இல்லை. 2021இல் என்னிடம் வந்த 19இல் 18ஐ அனுப்பிவிட்டேன் (ஒப்புதல்) – ஒன்றைத் தவிர. அது நீட் பற்றியது. அது பொது பட்டியலில் இருப்பதால், ஜனாதிபதிக்கு. 2022இல் வந்த 59இல் 48 அனுப்பப் பட்டுவிட்டன. 3 ஜனாதிபதிக்கு. மற்றவை withheld (நிராகரிக்கப்பட்டது?). 2023இல் பெறப்பட்ட ஏழும் அனுமதி வழங்கப்பட்டுவிட்டன.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் (கட்டாயம்) ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற ரீதியில் பேசுவோர் Article 200ஐ படித்துப் பார்க்க வேண்டும். மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்கலாம், நிராகரிக்கலாம், ஜனாதிபதிக்கு அனுப்பலாம்.

கேள்வி: நீங்கள் நிராகரித்த (withheld) 8 மசோதாக்களும் பல்கலை கழகங்கள் சம்பந்தப்பட்டவை?

ஆளுநர்: ஆம். ஏனெனில் அது concurrent விஷயம். அவை யுஜிசி சட்டங்களுக்குட்பட்டவை. தமிழகத்தில் பல்கலை கழகங்கள் அரசு துறைகள் போல நடத்தப் படுகின்றன. சிண்டிகேட் கூட்டங்கள் மாநில செயலகத்தில் நடத்தப்படுகின்றன. பல்கலை கழகங்களில் சுதந்திரம் முழுதுமாக பறிக்கப்பட்டுள்ளது. துணை வேந்தர் நியமனம் மட்டுமே வேந்தரிடம் (ஆளுநரிடம்) உள்ளது. அதுவும் போனால், பல்கலை கழகங்கள் முழுமையாக அரசியல் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அது சாத்தியமில்லை!

கேள்வி: ஆளுநர் நிதி முறைகேடுகள் பற்றிய புகார் பற்றி…?

பதில்: அவர்கள் (பிடிஆர்??) நாகரீகமானவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். நிதி அமைச்சர் (பிடிஆர்) சொல்லியிருப்பவை முழுக்கப் பொய்! (அக்ஷய பாத்திரத்துக்கு கொடுக்கப்பட்ட 5 கோடி பற்றி கீழே இருக்கும் லிங்கில் சென்று வாசிக்கவும். இந்து அமைப்பு என்ற ஒரே காரணத்துக்காக அனுமதி தராமல் இந்து விரோத சர்வ் அரசு இழுத்தடிப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது).

கேள்வி: Why has the number of civil aspirants passing out of TN gone down?

பதில்: That’s because the quality of our education has gone down so severely. (மேலும் விவரங்களுக்கு – கீழே லிங்க்).

கேள்வி: பாஜக உங்களிடம் டி.எம்.கே ஃபைல்ஸ் பற்றி அளித்த புகார் பற்றி.

பதில்: இது முறையாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால், உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 🔥 🔥

கேள்வி: நீங்கள் பலதரப்பட்டவர்களையும் சந்திப்பதால், ‘ராஜ் பவன் இப்போது ஒரு காப்பி கடை ஆகிவிட்டது’ என்று பிறர் விமரிசிப்பது பற்றி…

பதில்: ராஜ் பவன் என்பது colonial வார்த்தை. ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் (Lok Bhavan) என்று மாற்ற யோசித்து வருகிறேன். அது ஒரு பொது இடம். பெயரை மாற்றுவேன். ♥️

கேள்வி: நீங்கள் முன்னாளில் காவல்துறை அதிகாரி. தமிழக காவல்துறை பற்றி உங்கள் கருத்து?

பதில்: தமிழக காவல்துறையினர் புத்திசாலிகள், நன்கு பயிற்சி பெற்றவர்கள். ஆனால் மிகவும் அரசியலாக்கப்பட்டவர்கள். எடுத்துக் காட்டுக்கு, ஏப்ரல் 2022இல் நான் தருமபுர ஆதீனம் சென்ற போது கம்புகளையும் கற்களையும் வீசினார்கள். வசைபாடினார்கள். இது குறித்து ஆளுநர் மாளிகை போலீஸில் புகாரளத்தது. என்றாலு வழக்கு பதிய மறுத்து விட்டது காவல்துறை. காரணம் – சம்பந்தப்பட்டவர்கள் ஆளும் கட்சியினர் என்பதால். ஒரு ஆளுநரால் வழக்கு பதிய முடியவில்லை என்றால், பொது மக்கள் நிலை என்ன? 🔥

கேள்வி: திமுக அரசு பற்றி உங்கள் கருத்து?

பதில்: அரசு பற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். என்றாலும், தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சினை என்ன என்றால் – மனித வளம். தொழில்துறை நிர்வாகிகளிடம் ஏன் தொழிலை பெருக்குவதில்லை என்று நான் கேட்கும் போது அவர்கள், ‘90% of our engineers are unemployable’ என்கிறார்கள். இது பல்கலை கழகங்களின் வீழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. 12 – 15 ஆண்டுகளாக பணி புரியும் அஸோஸியேட் புரபசர்கள் சிலரிடம் பேசிய போது, ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு எப்படி இந்த வேலை கிடைத்தது என்று எண்ணினேன். (காசு குடுத்து தான் ஜி…).

தமிழக மக்கள் பற்றியும், தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பேசியிருக்கிறார். ()

மொத்தத்தில்… 🔥 🔥 🔥 🔥

Tamil Nadu governor RN Ravi’s exclusive interview with TOI: ‘DMK’s ideology parochial, dead’
https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-governor-rn-ravis-interview-with-toi-dmks-ideology-parochial-dead/articleshow/99973832.cms

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.