கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.சி. வேணுகோபால், கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரை சித்தராமையா கர்நாடக முதல்வராக நீடிப்பார், அதுபோல, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக சிவக்குமார் நீடிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சி ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளது.
காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி, கருத்து ஒற்றுமையின் அடிப்படையில், ஒருமனதாக கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்வு செய்துள்ளோம் என்று கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், கர்நாடகத்தில் கடந்த ஒரு சில நாள்களாக நிலவி வந்த யார் அடுத்த முதல்வர் என்ற குழப்பம் நீங்கி அதிகாரப்பீர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா (75) இரண்டாவது முறையாக பதவியேற்கவிருக்கிறார்.