தமிழக பள்ளிக் கூடங்கள் ஜூன் 1-ந்தேதி திறப்பு இல்லை: பள்ளி கூடங்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. இந்த நிலையில் வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசித்து வருகிறோம். பள்ளிக்கூடங்களை திறக்க ஜூன் 5 அல்லது ஜூன் 7 ஆகிய இரு தேதிகளை தேர்ந்தெடுத்து உள்ளோம்.
இதுபற்றி முதலமைச்சரிடம் கலந்து பேசி எந்த தேதியில் திறப்பது என்று முடிவு செய்வோம். இது தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சரிடம் கேட்டுவிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். இதனால் பள்ளிக்கூடங்கள் ஏற்கனவே திட்டமிட்ட தேதியில் திறக்க வாய்ப்பில்லை என்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.