விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் கல்குவாரிகளை
தடை செய்திட குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மற்றும் விதிமுறைகளை மீறி பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன, எனவே. அவற்றை மூட உத்தரவிட வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் சரமாரியாக புகார் தெரிவித்தனர்,
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
வேளாண் இணை இயக்குனர் பத்மாவதி, தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கோயில்ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு
விஜயமுருகன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான மண் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் மர்மநபர்கள் அதிகளவில் மண்ணை திருடி விற்கின்றனர். திருச்சுழி புலியூரான் கல்குவாரி, சிவகாசி பாரைப்பட்டி கல்குவாரிகளில் கண்மாய் பாதை, நீர்வரத்து பாதைகளை அடைத்து விதிகளையும் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்படுகின்றன.
அவற்றை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ,விரூயமுருகன் தெரிவித்தார்,
அதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர். மாவட்ட ஆட்சியருடன் கலந்தாnலாசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அர்ஜூனா நதியின் குறுக்கே கன்னிசேரி பகுதியில் தடுப்பணை உள்ளது. இதில் பட்டாசு கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது என கணேசன் என்ற விவசாயி புகார் தெரிவித்தார்,
திருவில்லிபுத்துரில் உள்ள மடவார் வளாகம் பகுதியில் சந்தை அமைக்க வேண்டும் என மோகன்ராஜ் என்ற விவசாயி கோரிக்கை விடுத்தார்,
நிலம் கிடைத்தால் அங்கு அமைக்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனை குழு செயலாளர் பதிலளித்தார்,
சாத்துர் வெள்ளரிக்காய், ராஜபாளையம் பஞ்சவர்ணம் மா, விருதுநகர் கொடுக்காப்புளி, அதலக்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாம்பழ ஏலத்தை உழவர் சந்தையில் நடத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவடடத் தலைவர் ராமச்சந்திரராஜா தெரிவித்தார்,
பொதுப்பணித்துறை கண்மாய்களில் மீன்பாசி குத்தகையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என இருதுறையும் இல்லாது மீன் வளர்ப்புத்துறையினர் ஏன் உள்ளே வருகின்றனர். கண்மாய் கட்டுப்பாடு 3 ஆண்டுகள் வரை அவர்களுக்கு செல்வதால் கண்மாயை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். செண்பகத் தோப்பில் விவசாயிகளிடமும் ரூ.20 வாங்குகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என முத்தையா என்ற விவசாயி தெரிவித்தார்,
இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.