
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 867 கன அடியாக சரிவடைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,700கன அடியிலிருந்து 867 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.78 அடியிலிருந்து 103.72 அடியாக குறை ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.74 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
நேற்று இரவு மேட்டூர் அனல் மின் நிலைய முதல் பிரிவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டது. மின் கோளாறு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.