
சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டார்கள். எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்தார்கள்.
கடந்த கால கசப்பான சம்பவங்களால், பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 27 ம் தேதி இவருக்கு நெருக்கமான உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
தகவல் அறிந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி , செய்தியாளர்களிடம் பேசுகையில்: என்ன நோக்கத்திற்காக சோதனை நடக்கிறது என தெரியவில்லை. சோதனை நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.