வெலிங்க்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 22வது லீக் சுற்றுப் போட்டி இன்று நியூசிலாந்து தலைநகர் வெலிங்க்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. துவக்க வீரர் அலி 15 ரன் எடுத்தார். பெல் 49 எடுத்தார். பாலன்ச் 6 ரன் எடுத்த போதும், பின்னர் வந்த ரூட் நின்று நிலைத்து ஆடி 121 ரன் எடுத்து அணியின் ஸ்கோர் அதிகரிக்க உதவினார். மோர்கன் 27ம், டெய்லர் 25ம் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்தது. இலங்கை தரப்பில் பந்துவீச்சாளர்கள் 6 பேரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 310 ரன் என்ற இலக்கை நோக்கி இலங்கை ஆடத் தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் தில்ஷன் 44 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் திரிமன்னேயுடன் ஜோடி சேர்ந்த சங்ககரா அதிரடியாக ஆடினார். இருவரும் சேர்ந்து மேலும் விக்கெட் இழக்காமல் வெற்றிக்குத் தேவையான ரன்னை சேர்த்தனர். திரிமன்னே ஆட்டமிழக்காமல் 139 ரன் எடுத்தார். சங்ககரா ஆட்டம் இழக்காமல் 117 ரன் எடுத்தார். 47.2 ஓவர் முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழந்து 312 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்துடன் மோதல்: இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari