kodaikanal traffic - 2026

கொடைக்கானலில் குவிந்த பயணிகள்: நெரிசலால் திக்கித் திணறல்!

சற்றுமுன் சுற்றுலா மதுரை லைஃப் ஸ்டைல்
kodaikanal traffic - 2026

திண்டுக்கல்: வார விடுமுறையை யொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் 5 கி.மீ. தூரத்துக்கு மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வார விடுமுறையை யொட்டி, கொடைக்கானலுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் படையெடுத்தனர்.

ஒரே நேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனூர், சீனிவாசபுரம், உகார்த்தே நகர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. கொடைக்கானல் மலையில், விடுமுறை வந்தால் பயணிகள் படையெடுப்பு வழக்கமாக உள்ளது.

மேலும், சுற்றுலா தலமாக இருப்பதாலும், சீதோஷ்ண நிலை குளிராக காணப்படுவதாலும் கோடைக்காலங்களில் பயணிகள் இங்கு குவியத் தொடங்கியுள்ளனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.