
படம் லாரி டிரைவர் அசோக்..
அம்பாசமுத்திரம் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் பைக்கில் மோதியதில் இரண்டு வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லிடைக்குறிச்சி, அக்க சாலை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிராஜ் (30) தனது தாயார் அலங்காரி (எ) சரஸ்வதி (50) சகோதரி இசக்கியம்மாள் (எ) கார்த்திகா (25) சகோதரி மகன் சந்துரு (2) ஆகியோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக பாபநாசத்திற்கு இன்று பைக்கில் சென்றனர்.
பாபநாசம் சாலையில் கோடாரங்குளம் விலக்கு அருகே சென்ற போது எதிரில் வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை எதிரில் இசக்கிராஜ் வந்த பைக் மீது மோதியதாம். இதில் அலங்காரி, இசக்கியம்மாள் மற்றும் சந்துரு மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இசக்கிராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸார் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியை ஓட்டிவந்த விக்கிரமசிங்கபுரம், பசுக்கிடை விளை, அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மயில் மகன் அசோக் (33) காவல்நிலையத்தில் சரணடைந்தார்.