
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா நாளை ஜஊலஐ14ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்ட திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று இரவு சேனை தலைவர் புறப்பாடு நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் ஆடிப்பூர திருவிழா
முதல் நாள் கடந்த 12ம் தேதி காலை சிம்ம லக்னத்தில் அங்கூரம். தேங்காய் தொட்டுநியமனம்
அங்குறார்ப்பணம்
மாலை 5.30 மணிக்கு மேல் 6,30் மணிக்குள் தனுசு லக்னத்தில் மிருத்ஸங்கிரஹணம்- திருப்பூரநந்தவனத்தில்
சிறப்பாக நடைபெற்றது.
நாளை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு ஆண்டாள், ெரங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தேரோட்டம் வருகிற 18-ந் தேதியன்று காலை 11 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
20-ந் தேதி சயன திருக்கோலத்தில் ஆண்டாள், ெரங்க மன்னார் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சயன மண்டபத்தில் சயனிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
22-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஆண்டாள், ரெங்க மன்னார் கீழ ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளுகின்றனர். பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.
பிரம்மாண்ட பந்தல் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்ட திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்யாண மண்டபங்கள். தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர். விழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் தினமும் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர். சுகாதார ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.