பெற்ற மகள் பாலியல் வன்கொடுமை தாய், தந்தை கைது..

Published:

அருப்புக்கோட்டை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை உடந்தையாக இருந்த தாயை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAMILDHINNEWSLOGO copy - 2026

அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியரின் 14 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை அவரது தந்தை தனது மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு முன் தனது மகளை படிப்பதற்காக திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் சேர்த்து விட்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

காப்பகத்தில் இருந்த அந்த சிறுமி தனது தந்தை தன்னிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதை காப்பக நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காப்பக நிர்வாகிகள் இது பற்றி விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் தெரிவித்து. அந்த சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் தாய் இருவரையும் கைது செய்தனர்.

பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img