விடியல் தருவோம்னாங்க… குடியல் ஆட்சியைக் கொடுத்தாங்க..!

annamalai at thirupparankundram - 2026

டாஸ்மாக் காசை வைத்து அரசு நடைபெறுகிறது என்று அண்ணாமலை பேசினார்.

தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துதான் அரசு நடைபெறுகிறது என்று, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் அவர் மேலும் கூறியதாவது:

திமுக ஆட்சி மக்களுக்கு எந்த அளவுக்கு எதிராக உள்ளது என்பது தெரியும்.. தமிழகம் சிறந்து விளங்குவதற்கு காரணம் சௌராஷ்டிரா மக்கள். விசைத்தறி நெசவாளர்களுக்கு வாரியம் அமைப்பதாக திமுக வாக்குறுதி கொடுத்து ஆனால், அமைக்கவில்லை..

தமிழகத்தில் கடன் வாங்கும் மாநிலங்களில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை மாற்றி உள்ளது. கடன் வாங்குவதில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது, முதலிடத்திற்கு வந்துள்ளது.

மதுவிலிருந்து வரும் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்தி வருகிறது திமுக.. அமைச்சர் பி டி ஆர் பேசி 4 மாதம் ஆகிவிட்டது.. 2014 இல் 24 கோடி பெண்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர் ஆனால், தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு தொடங்கப் பட்டுள்ளனர்..

2014 இல் பதினோரு சதவீதம் பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் இருந்தது .
ஆனால், தற்போது 100 சதவீத பள்ளிகளில் தனி கழிப்பிடங்களை மோடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் ,எம்பி மாணிக்கத் தாகூர் பாதி நேரம் டெல்லியில் தான் இருப்பார்.

24 கோடி பெண்கள் தான் 2014 வரை வங்கி கணக்கு வைத்திருந்தார்கள். தற்போது 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள். 2014 வரை பதினோரு சதவீதம் பள்ளிகளில் தனி கழிப்பறை இல்லை ஆனால் தற்போது நூறு சதவிதம் உள்ளது.

ரஃபேல் விமானத்தில் தற்போது பெண்கள் பயணித்திருக் கிறார்கள். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு மோடி தேவைப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தத் தொகுதி எம்பி மாணிக்கம் சாகர் தமிழகத்தில் இருக்க மாட்டார் அவர் டெல்லியில் தான் இருப்பார். அவரை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். மதுரை மற்றும் விருதுநகர் எம்பிகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. ராகுல் காந்தி ஜோக்கர் என, சொல்கிறார்கள். வேறு மாதிரி இருக்கிறார்கள்.

காவிரி விவகாரத்தில் இரண்டு எம்பிக்களும் வாயை திறக்கவில்லை. இவர்களை விட பெரிய டுபாக்கூர் முதல்வர் ஸ்டாலின். அவர் பெங்களூர் சென்றபோது 32 டிஎம்சி தண்ணீர் ஜூலை மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அப்போது கொழுக்கட்டை வைத்திருந்தாரா.

இந்தியாவில் ஈடுபட்டு இல்லாமல் 10 ஆண்டு காலம் 2ஜி ஊழழில் ஈடுபட்டவர்கள், தனிநாடு வேண்டும் என்று கேட்டவர்கள், காஷ்மீரை தனி நாடு என்று சொன்னவர்கள்.
இந்த கூட்டணியை பொறுத்தவரை இந்தியாவை சூறையாடியவர்கள்.

68 சதவீத பெண்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். 7000 கோடியில் 2500 கோடி மத்திய அரசின் பணம். அதை கொடுக்க வாய்ப்பு இல்லை என்று அண்ணாமலை பேசினார்.

குடிப்பதில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்கிறது. 5,500க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 18வயதில் இருந்து 60 வயது வரை 18 சதவீதம் பேர் குடிக்கு அடிமை ஆகி இருக்கின்றனர். மது இல்லாமல் தமிழகத்தை நடத்த முடியாது என்று சொல்கிறார்கள். வரி மூலமாக அரசுக்கு வரக் கூடிய ரூபாய் 44 ஆயிரம் கோடி. தமிழக அரசுக்கு பாஜக., சார்பில் வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளோம். அதில், பனை, தென்னை மரங்களில் இருந்து வரும் அனைத்து பொருட்களும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளோம்.
– அண்ணாமலை (திருப்பரங்குன்றத்தில்..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories