
செங்கோட்டை: செங்கோட்டை தாலுகா அலுவலம் அருகில் வைத்து தென்காசி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விஎச்பி மாவட்ட இணைச் செயலாளர் முத்துமாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் குருசாமி. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஹரியானா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்.வன்னியராஜன் மாவட்ட செயலாளர் முருகன் தளவாய். சபரிமணி. முன்னாள் மாநில தலைவர்.. பெரியகுழைகாதர் கண்டன உரைஆற்றினார்.
மாநில இணைச் செயலாளர் காளியப்பன் . பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் மாரியப்பன். நகர தலைவர் வேம்புராஜ் ஆகியோர் பேசினா். நிகழ்ச்சியில் நகர பார்வையாளர் வாசன். அமைப்புசாரா பிரிவு . காளி.இளைஞர் அணி தலைவர் வீரசிவா .ஸ்ரீராம் கார்த்திக் ,அருண் சங்கர் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முருகன் .இ.மு . நகர தலைவர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் நகர செயலாளர்.சரவணன்.நன்றியுரை நிகழ்த்தினார்.