
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டது. தொடர்ந்து புவிவட்டப் பாதையில் சுற்றி வந்த விண்கலம், இன்று புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம், நிலவை சுற்றத் தொடங்கியுள்ளது.
சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், நாளை இரவு 11 மணிக்கு சுற்றுவட்டப்பதையை குறைப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் இம்மாத இறுதியில் நிலவை சென்றடையும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக 3-வது முயற்சியாக கடந்த மாதம் 14 ம் தேதி சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட்டது. திட்டத்தின் முக்கிய நிகழ்வாக இன்று இரவு 7.15க்கு சந்திராயன் 3 நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆக.23 அன்று அது நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.