அயர்லாந்துக்கு வெற்றி இலக்கு 412 ரன்கள்: தென்னாபிரிக்கா அபார பேட்டிங்

சற்றுமுன்

கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், லீக் சுற்றின் 24வது போட்டியில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கான்பெரா நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. துவக்க வீரர் காக் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், பின்னர் வந்த பிளெஸிஸ் உடன் அம்லா இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். அம்லா 128 பந்தில் 159 ரன் குவித்தார். டுபிளெஸிஸ் 109பந்தில் 109 ரன் எடுத்தார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 24 ரன்னும், மில்லர் 46, ரோசோவ் 61 ரன்னும் எடுத்து 50 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவிக்க உதவினர். இதை அடுத்து 412 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.