வெள்ளிமலை ஆஸ்ரமம் 1940ம் ஆண்டு சுவாமி அம்பானந்தரால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி மதுரானந்தரும், மூன்றாவதாக சுவாமி சைதன்யானந்தஜி மகராஜும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்கள்.
ஆஸ்ரமம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மற்றும் தொழிலதிபர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று சமூக சேவை, கல்வி மற்றும் மருத்துவ சேவை என ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது.
மேலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோயாளிகளுக்கு மருத்துவ உதவி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி என, பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது.
குறிப்பாக கடந்த 2004ல் சுனாமி ஏற்பட்டபோது முகாம்கள் அமைத்து பல்லாயிரக் கணக்கான ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப் பட்டது. ஓகி புயல் பாதிப்பின் போது மலை வாழ் மக்களுக்கு பல்வேறு உதவிகள், கொரோனா நேரத்தில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் தென்னிந்தியாவில் சமய வகுப்புகள் நடத்தி இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சேவைகளையும் செய்து வருகிறது.
இந்த சமூக சேவைகளைப் பாராட்டி புதுதில்லியில் உள்ள டாக்டர் மங்களம் சுவாமிநாதன் பவுண்டேஷன் சார்பில் தத்தோபந்த் தெங்கடி சேவா சம்மான் 2023′ என்ற விருது வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமத்துக்கு 29ம் தேதி புதுதில்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.