கனிமொழிக்கு ஒரு கேள்வி: சிலைக்கு எதுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு?

உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை

சென்னை:

திரிபுராவில் பாஜக.,வினர் வெற்றி பெற்றதை அடுத்து அங்கு நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, கம்யூனிஸ்ட் கட்சியினரால் நிறுவப் பட்டிருந்த லெனின் சிலை அகற்றப் பட்டுள்ளது.

இதை அடுத்து தனது முக நூலில் ஈவேரா சிலையும் ஒரு காலத்தில் தமிழகத்தில் அகற்றப் படும் என்று குறிப்பிட்டு ஒரு பதிவு செய்து உடனே அதை நீக்கியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. இதை அடுத்து  அவர் மீது பலத்த கண்டனங்களும் எதிர்ப்பும் இளம்பியது. சமூகப் பதற்றத்தை உருவாக்கிய ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், ஹெச்.ராஜா கருத்துக்கு ஆதரவாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி கருத்துகளைச் சொன்ன போதெல்லாம் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்

குறிப்பாக, அண்மையில் கனிமொழி கூறிய கருத்தைக் குறிப்பிட்டு, அவருக்கு ஒரு கேள்வி எழுபியுள்ளார் ஒருவர். அதில், ஐயோ பாவம்…. இதுதான் விதி. திருப்பதி ஏழுமலையான் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்றார் கனிமொழி. இன்று தமிழகம் முழுவதும் பெரியார் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… ஆகா.?கேளுமா கனி? கல்லுக்கு எதுக்கு பாதுகாப்பு… என்று கேட்டுள்ளார்.

 

தொடர்ந்து இது குறித்த விவாதங்களால் சமூக ஊடகங்கள் பரபரப்பாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.