மதுரை ரயில்வே கோட்டத்தில் மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மாதத்திற்கு 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச் சீட்டுகள் மூலம் பயணம் செய்தனர். தற்போது மதுரை மண்டல அதிகாரிகளின் தீவிர பிரச்சாரம் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் 68,631 ஆக உயர்ந்துள்ளது.
மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும், கடந்த ஆண்டில் மாதத்திற்கு 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச் சீட்டுகள் மூலம் பயணம் செய்தனர். தீவிர பிரச்சாரம் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் 68,631 ஆக உயர்ந்துள்ளது என்றும் தென்னக ரயில்வே மதுரை மண்டலம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி – செங்கோட்டை வழித்தட செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து!
13.08.24 அன்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் ரயில்கள் தென்காசி-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
- வ.எண்:06685 திருநெல்வேலி – செங்கோட்டை வண்டி (காலை 7 மணி திருநெல்வேலி புறப்பாடு) தென்காசி வரை மட்டுமே செல்லும்.
- வ.எண்:06684 செங்கோட்டை- திருநெல்வேலி வண்டி (காலை 10 மணி செங்கோட்டை புறப்பாடு) தென்காசியிலிருந்து கிளம்பும்.
- வ.எண்:06681 திருநெல்வேலி – செங்கோட்டை (காலை 9:45 மணிக்கு திருநெல்வேலி புறப்பாடு) வண்டி தென்காசி வரை செல்லும்.
- வ.எண்:06658 செங்கோட்டை- திருநெல்வேலி வண்டி (மதியம் 2:35 செங்கோட்டை புறப்பாடு) வண்டி தென்காசியிலிருந்து கிளம்பும்.
மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.