செங்கோட்டையில் ஆவரம்பாளையம் சர்வோதய சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா.
செங்கோட்டை கீழபஜார் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆவரம்பாளையம் சர்வோதய சங்க கிளை விற்பனை நிலையத்தில் வைத்து தேசபிதா மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அகில இந்திய காந்தி இயக்கத்தலைவா் வி.விவேகானந்தன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி கிளப் (கேலக்ஸி) தலைவா் வழக்கறிஞா் கோபிநாத், மனித உரிமைகள் கழக திருநெல்வேலி மண்டலச்செயலாளா் முருகையா ஆகியோர் சமூக ஆர்வலா் மணிகண்டன் முன்னிலைவகித்தனா். கிளை மேலாளா் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அரசு மருத்துவமனை முதுநிலை நுட்பநர் ஹரிஹரநாராயணன் தொகுப்புரையாற்றினார். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவா் ஆதிமூலம், குற்றாலம் பராசக்தி கல்லுாரி முன்னாள் பேராசிரியா் கயற்கன்னி, ரோட்டரி கிளப் மாவட்ட துணை ஆளுநர் பால்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினா்.
அதனைதொடா்ந்து நல்லாசிரியா் விருது பெற்ற ஆக்னஸ்மேரி, கலைச்செல்வி ஆகியோருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக முத்துசாமி பூங்கா, நகராட்சி அலுவலகம், வாகைமரத்திடல் பகுதிகளில் அமைந்துள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் கேலக்ஸி முன்னாள் தலைவா் ரவி செயலா் பொன்னுத்துரை, உறுப்பினா்கள் மாரியப்பன், பிச்சையாபிள்ளை, புருஷோத்தமன், சுந்தரம், சுப்ரமணியன், இசக்கிமுத்து, கணேசன், முத்துக்குமார், மற்றும் சங்க நிர்வாகிகள் ஊழியா்கள் செல்வக்குமார், வேல்சாமி, இசக்கிபாண்டியன், ரமேஷ், சண்முகசுந்தரம், ராஜ்குமார், மாரியப்பன், வெங்கடாசலமூர்த்தி, வெள்ளத்துரை மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் உதவியாளா் வேல்சாமி நன்றி கூறினார்.