கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பா சுவாமி ஆலயத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.
கார்த்திகை 1 தேதியான இன்று பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் பக்தர்கள் 48 நாள் விரதம் இருக்க இன்று முதல் மாலை அணிவித்து தங்களது முதல் நாள் விரதத்தை தொடங்கியுள்ள நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதித்ரா ஐயப்பன் ஆலயத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று ஐயப்ப சன்னிதியில் மாலை அணிவித்து வருகின்றனர்.
குருசாமி மாலை அணிவிக்க அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தொடர்ச்சியாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று முதல் ஐயப்பன் ஆலயத்தில் நாள்தோறும் அதிகாலை சிறப்ப அபிஷேகமும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது 48 நாள் விரதம் இருக்கும் கன்னி சாமிகள் குறிப்பாக இன்று முதல் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே போல் காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் காலை முதலே பக்தர்கள் மாலை அணிவித்து வருகின்றனர்.