அய்யாக்கண்ணுவுக்கு பதிலடி கொடுத்த நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது: ஹெச்.ராஜா !

Published:

ayyakkannu temple protest - 2026

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நேற்று பிரதமர் மோடிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்த விவசாயிகள் சங்க நிர்வாகி அய்யாக்கண்ணுவை தடுத்து கேள்வி கேட்டுள்ளார் உள்ளூர் பாஜக., நிர்வாகி நெல்லையம்மாள்.

அய்யாக்கண்ணு கோயிலுக்குள் வந்து எப்படி துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கலாம் என்று தட்டிக் கேட்டபோது, நெல்லையம்மாளை கைநீட்டி அடிக்கப் பாய்ந்தார் அய்யாக்கண்ணு. பதிலுக்கு அந்தப் பெண், அவரை அடிக்க முற்பட இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தைரியமாக ஒரு பெண்ணாக தனித்து நின்று எதிர்த்துள்ளார். இப்படி, அய்யாக்கண்ணு கூட்டமாக வந்தபோது அவர்களிடம் மல்லுக்கு நின்ற நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது கொடுக்க வேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவு…

பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம்

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img