திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்ச்திரத்தில் டி.டி.வி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று தினகரன் ஆதரவாளர்கள் பாவூர் சத்திரம் காமராஜர் சிலைமுன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். ,ஒன்றிய செயலர் நடராஜன்,பாபு,வெள்ளபாண்டி,ஜெயராஜ்,ஆறுமுகநயினார் ,சுடலை மணி ,அருளானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர் இதே போல் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் உச்சி மாகாளி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்டஎம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபாண்டியன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Popular Categories



